பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 9 பேருக்கு இடமாற்றம்

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 9 பேருக்கு இடமாற்றம்

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 9 பேருக்கு இடமாற்றம்

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2014 | 8:39 am

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 9 பேருக்கு பொலிஸ் மாஅதிபரினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் 8 பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும், பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி, அந்த நிலையத்தின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மினுவாங்கொடை பொலிஸ் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அளுத்கம பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி, அதே நிலையத்தின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதவிர தெல்தெனிய, புசல்லாவை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரிகள் அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கே பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்