பேராதனை பல்கலைக்கழக மாணவனை கொலைசெய்த, மற்றுமொரு மாணவனுக்கு மரண தண்டனை

பேராதனை பல்கலைக்கழக மாணவனை கொலைசெய்த, மற்றுமொரு மாணவனுக்கு மரண தண்டனை

பேராதனை பல்கலைக்கழக மாணவனை கொலைசெய்த, மற்றுமொரு மாணவனுக்கு மரண தண்டனை

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2014 | 7:16 pm

1997 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தின் மாணவனை கொலைசெய்த சம்பவத்தில், குற்றவாளியாக காணப்பட்ட அந்த பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு மாணவருக்கு கண்டி மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு, மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்கவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவனான செல்வவிநாயர் வரபிரகாஷ், கடத்திச்செல்லப்பட்டு கொலைசெய்யப்பட்டதாக பிரதிவாதிக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் முதலாவது பிரதிவாதி இல்லாது வழக்கு விசாரணை இடம்பெற்றதுடன், பிரதிவாதி வெளிநாடொன்றில் இருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைய, சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த வழக்குடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேகநபர், கண்டி மேல் நீதிமன்றத்தில் குற்றத்தில் ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்