தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து; வேன் சாரதி உயிரிழப்பு

தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து; வேன் சாரதி உயிரிழப்பு

தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து; வேன் சாரதி உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2014 | 9:18 am

களுத்துறை – வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் வேன் சாரதி உயிரிழந்துள்ளார்.

அதிவேக வீதியின் 23 ஆவது கிலோமீற்றரின் ஆர் பகுதியில் நேற்றிரவு வேன் ஒன்று வீதியின் பாதுகாப்பு வேலியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சாரதி உட்பட 9 பேர் காயமடைந்த நிலையில் களுத்துறை நாகொட வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பளை பகுதியைச் சேர்ந்தவர்களே  விபத்துக்குள்ளானதுடன், அவர்களில் 6 பெண்கள் அடங்குகின்றனர்.

மாத்தறையில் மத நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் திரும்பி வந்துகொண்டிருந்தபோது நேற்றிரவு 10.45 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.


எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்