குருக்கள் மடம் புதைகுழி தொடர்பில் பிரதேச மக்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கத் தீர்மானம்

குருக்கள் மடம் புதைகுழி தொடர்பில் பிரதேச மக்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கத் தீர்மானம்

குருக்கள் மடம் புதைகுழி தொடர்பில் பிரதேச மக்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கத் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2014 | 7:34 pm

மட்டக்களப்பு – குருக்கள் மடத்தில் உள்ளதாக கூறப்படும், புதைகுழி தொடர்பில் பிரதேச மக்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விசாரணைகள் காத்தான்குடி பிரதேச சபையில் விரைவில் இடம்பெறவுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அத்துடன், பிரதேச மக்களிடம் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

குருக்கல்மடத்தில் உள்ளதாக கூறப்படும் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளை அடுத்தமாதம் 18 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்