கிளிநொச்சியில் இராணுவ வீரர் தற்கொலை முயற்சி

கிளிநொச்சியில் இராணுவ வீரர் தற்கொலை முயற்சி

கிளிநொச்சியில் இராணுவ வீரர் தற்கொலை முயற்சி

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2014 | 12:36 pm

கிளிநொச்சி, இரணைமடு இராணுவ தலைமையகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் தனக்குத்தானே சுட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளதாக பொலிஸார் ​தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இராணுவ வீரரின் கழுத்துப் பகுதியில் சூடு பட்டிருப்பதாகவும், காயத்துடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பகுதியைச் சேர்ந்த 29 வயதான இராணுவ வீரரே தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்