கட்டுநாயக்க அதிவேக வீதியில் அனுமதியின்றி பிரவேசித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி(VIDEO)

கட்டுநாயக்க அதிவேக வீதியில் அனுமதியின்றி பிரவேசித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி(VIDEO)

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2014 | 11:13 am

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக வீதியின் பேலியகொடை நுழைவாயிலின் ஊடாக அனுமதியின்றி பிரவேசித்த மோட்டார் சைக்கிளொன்று வத்தளையில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாரின் எச்சரிக்கையை மீறி அதிவேக வீதியினுள் நுழைந்த மோட்டார் சைக்கிள், அதன் முன்னால் பயணித்த காரொன்றுடன் நேற்றிரவு 10.50 அளவில் மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொரள்ளை – காசல் வீதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.


எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்