ஓமந்தையில் வாகன விபத்து;பெண்ணொருவர் பலி (video)

ஓமந்தையில் வாகன விபத்து;பெண்ணொருவர் பலி (video)

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2014 | 2:35 pm

வவுனியா ஓமந்தை நொச்சிமோட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று முற்பகல் 10.50 அளவில் இடம்பெற்றுள்ளது.

accident a9 -2
அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் ஒன்று நொச்சிமோட்டை பகுதியில் மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பெண்ணொருவரும்  இரண்டு ஆண்களும் அடங்கியுள்ளனர்.

நொச்சிமோட்டை பகுதியிலுள்ள அபாயகரமான வளைவொன்றில் வாகனமொன்றை முந்திச்செல்ல முற்பட்டபோதே வேன் மரத்தில் மோதியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்