உலகக்கிண்ண காலப்பந்தாட்டத் தொடர்; காலிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பம் (முழு விபரம் இணைப்பு)

உலகக்கிண்ண காலப்பந்தாட்டத் தொடர்; காலிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பம் (முழு விபரம் இணைப்பு)

உலகக்கிண்ண காலப்பந்தாட்டத் தொடர்; காலிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பம் (முழு விபரம் இணைப்பு)

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2014 | 4:31 pm

உலகக்கிண்ண காலப்பந்தாட்டப் போட்டிகளின்  இரண்டு காலிறுதிப் போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று இரவு  இடம்பெறவுள்ளன.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு பிரவேசிக்கவுள்ளன

இதன் முதல் போட்டியில்  ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.

ரியோடி ஜெனீரோவில் இலங்கை நேரப்படி இன்று  இரவு  9.30 க்கு இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இரு அணிகளும் பலம் பொருந்தியவை என்பதால் போட்டி  விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் ஜேரமன் வீரர்கள் எழுவர் காய்ச்சலால் அவதியுறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீரர்களின் பெயர்ப்பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை ஜேரமனின் பல முக்கிய வீரர்களும் இதில் அடங்குவதாக சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

3 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஜேர்மனி அணி கடந்த 3 உலக கிண்ணப் போட்டிகளிலும் அரையிறுதிக்கு நுழைந்தது.

தற்போது 13 ஆவது முறையாக அரைறுதிக்கு நுழையும் ஆர்வத்துடன் நாளை ஜேர்மன் அணி களமிறங்கவுள்ளது

ஜெர்மன் அணியின் நட்சத்திர வீரராக பிரகாசிக்கும்  தோமஸ் முல்லர்  இம்முறை உலக்கிண்ண போட்டிகளில் 4 கோல்களை பெற்றுள்ளார்

எவ்வாறாயினும் ஜெர்மனி அணிக்கு  சவால் விடுக்கும் வகையில்  உள்ள பிரான்ஸ் அணி ,  இந்த போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடும் என எதிர்பாரக்கப்படுகின்றது

அந்த அணியின் நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா  இதுவரை  போட்டிகளில் 3 கோல்களை பெற்றுள்ளார்.

1998 ஆம்  ஆண்டு சாம்பியனான பிரான்ஸ்  அணி 6ஆவது முறையாக அரையிறுதியில் நுழையும் ஆர்வத்தில் இன்று  களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

france-vs-germany

இதேவேளை, இலங்கை நேரப்படி அதிகாலை 1.30 க்கு நடைபெறவுள்ள இரண்டாவது காலிறுதிப் போட்டியில் தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள பிரேசில் மற்றும் கொலம்பியா அணிகள் மோதுகின்றன.

5 முறை உலக கிண்ணத்தை கைப்பற்றிய   பிரேசில் அணி 11 ஆவது முறையாக அரையிறுதிக்குள்  நுழையும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது.

உபாதைக்குள்ளாகியுள்ள நட்சத்திர வீரர் நெய்மர் இதுவரை 4 கோல்களை அடித்துள்ளார்.

சிலிக்கு  எதிரான போட்டியில் உபாதைக்குள்ளான அவர் தற்போது உடல் தகுதியுடன் இருப்பதால் நாளைய ஆட்டத்தில் விளையாடுவார் என பயிற்றுவிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 உலககிண்ண போட்டிகளிலும்  பிரேஸிரல் அணி காலிறுதியில்  தோல்வியடைந்து வெளியேறினாலும் இம்முறை தனது சொந்த நாட்டில் விளையாடுவவதால் அரையிறுதிக்கு பிரவேசிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
அத்துடன் உலகக்கிண்ண போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொலம்பியா முதல் முறையாக காலிறுதிக்குள் நுழைந்துள்ளது.

இம்முறை போட்டிகளில் ஜேம்ஸ் ரோட்ரிகஸ்  4 போட்டிகளில் கலந்து கொண்டதுடன்  5 கோல்களை அடித்து  பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

முதல் முறையாக காலிறுதியில் விளையாடும் கொலம்பியா அணி பிரேசிலை வீழ்த்தி  அரையிறுதியில் நுழைந்து சாதனை படைக்கும் எதிர்பாரப்பில் நாளை களமிறங்கவுள்ளது.

brasil-vs-colombia


எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்