இந்திய மீனவர்கள் 17 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

இந்திய மீனவர்கள் 17 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

இந்திய மீனவர்கள் 17 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2014 | 5:54 pm

தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 17 இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களின் வழக்கு விசாரணை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து, நீதிபதி அனந்தி கனகரட்னத்தினால்  எதிர்வரும் 11ஆம் திகதி வரை இவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 17 இந்திய மீனவர்களும் அநுராதபுர சிறைச்சாலையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் பீ.எஸ் மிரண்டா தெரிவித்தார்.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த 29ஆம் திகதி கடற்படையினரால் 17 இந்திய மீனவர்களும் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்