‘அஞ்சான்’ படத்திற்காக சூர்யா பாடும் முதல் பாடல்

‘அஞ்சான்’ படத்திற்காக சூர்யா பாடும் முதல் பாடல்

‘அஞ்சான்’ படத்திற்காக சூர்யா பாடும் முதல் பாடல்

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2014 | 3:36 pm

‘அஞ்சான்’ படத்திற்காக பாடல் ஒன்றைப் பாட இருக்கிறார் நடிகர் சூர்யா. வெள்ளித்திரையில் சூர்யா பாடும் முதல் பாடலாக இது அமையவிருக்கிறது.

சூர்யா, சமந்தா, வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘அஞ்சான்’. லிங்குசாமி தயாரித்து, இயக்கும் இப்படத்தினை யு.டிவி நிறுவனம் வெளியிட இருக்கிறது. யுவன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

anjaan_1975540g

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 17ஆம் திகதி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜூலை 5ஆம் திகதி ‘அஞ்சான்’ படத்தின் டீஸரை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், ‘அஞ்சான்’ படத்திற்காக யுவன் இசையில், சூர்யா ஒரு பாடலை பாட இருக்கிறார். ஒரே ஒரு முறை விளம்பரத்திற்காக மட்டுமே பாடியுள்ள சூர்யா, வெள்ளித்திரையில் பாடும் முதல் பாடலாக அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடிகர்கள் தங்களது படங்களில் வரும் பாடல்களை அவர்களே பாடிவரும் பட்டியலில் தன்னையும் இணைத்துள்ளார் சூர்யா.


எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்