கத்தி படத்தின் இரகசியத்தை வெளியிட்டார் முருகதாஸ்

கத்தி படத்தின் இரகசியத்தை வெளியிட்டார் முருகதாஸ்

கத்தி படத்தின் இரகசியத்தை வெளியிட்டார் முருகதாஸ்

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2014 | 11:52 am

கத்தி படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ வெளிவந்ததிலிருந்தே அப்படத்தின் அடுத்தடுத்து வெளிவரும் தகவல்களும் படு சுவாரசியமாகி விட்டது. அப்படி கசியும் தகவல்கள் உண்மையா? பொய்யா என யோசிக்கும் முன்பே மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார் படத்தின் இயக்குனர் முருகதாஸ்.

சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், கத்தி படத்தை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளார். “கத்தி’ படத்தில் விஜய்க்கு இரண்டு கேரக்டர்கள், ஒருத்தர் கதிரேசன், இன்னொருத்தர் ஜீவானந்தம். ஆனா, இவங்க இரண்டு பேரும் அப்பா மகன் கிடையாது.” என விஜய்யின் பாத்திரம் பற்றி சூசகமாகக் கூறியுள்ளார்.

ஆனால் வெளியிடாத விஷயமும் ஒன்று உள்ளது. விஜய் ஏற்றிருக்கும் இரண்டு வேடங்களுக்கும் தோற்றத்தில் எந்த வித மாற்றுமும் கிடையாது. இரண்டு பேரும் ஒரே சாயலில் தான் இருப்பார்களாம். ஏன் இப்படி? இந்த தோற்ற ஒற்றுமையை பயன்படுத்தி ஆள் மாறாட்டம் செய்வதுபோல் முருகதாஸ் காட்சி அமைத்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்