போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் அரசாங்கம் கரிசனை காட்டவில்லை – சீ.வி.விக்னேஸ்வரன்

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் அரசாங்கம் கரிசனை காட்டவில்லை – சீ.வி.விக்னேஸ்வரன்

எழுத்தாளர் Staff Writer

30 Jun, 2014 | 8:28 pm

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதில் அரசாங்கம் அதிக கரிசனை காட்டவில்லையென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான அடிக்கல்லை இன்று நாட்டிவைத்து உரையாற்றும் போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

[quote]மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பூநகரி அருகே வெள்ளாங்குளத்தில் கணேசபுரம் என்ற பகுதியில் இராணுவம் எடுத்து நடத்துகின்றது. 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கென பயிர்ச்செய்கைக்காக தலா 2 ஏக்கர் வீதம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் அப்போதைய மகாவலி அமைச்சரால் வழங்கப்பட்டன. ஆனால் அதற்கான ஆவணங்கள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அக்காலத்தில் இருந்த இளைஞர் யுவதிகள் அக்காணிகளில் பயிற்செய்க்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்கள். 1990ஆம் ஆண்டுப் பகுதியில் யுத்த சூழ்நிலை காரணமாக அப்பகுதியை விட்டு இளைஞர் யுவதிகள் இடம்பெயர்ந்து சென்றனர். 2009ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் அரசானது அந்தக் காணிகளை கையிட்டு இராணுவக்கட்டுப்பாட்டிற்குள் ஈர்க்கப்பட்டது. உள்ளூர் மக்கள் அக்காணிக்குள் தற்போது போக முடியாது. இக்காணிகள் வழங்கப்பட்ட மன்னார் பிரசே மக்கள் தற்போதும் அப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்தும்கூட ஆரம்பகாலத்தில் வழங்கப்பட்ட அக் காணிகளை தாம் எடுத்துப் பயிர் செய்ய முடியாத நிலையில் உளளனர். இராணுவம் தொடர்ந்தும் வடக்கு மாகாணத்தில் இருந்து வருவதால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு அவலம் இது. இது தொடர்பில் நாம் அனைவரும் கரிசனை எடுத்து உரிய நடவடிக்கைகள் எடுக்க கடமைப்பட்டுள்ளோம் அல்லவா? எமது மக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு போரின் பின்னர் அவர்களுக்கு ஆவணை செய்யாதிருப்பதால் எமது மக்களின் நிலை மிகவும் மோசமாகி வருகின்றது. அரசாங்கம் பாரிய செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் எடுக்கும் கரிசனையை போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாடத் தேவைகளின்மீது காட்டாதிருப்பது மன வருத்தத்தை தருகிறது. எனினும் இன்று மகிந்தோதய தொழில்நுட்ப அடிக்கல் நாட்டு விழாவுக்கு என்னையும் எங்கள் அமைச்சரையும் அழைத்தமை மனநிறைவைத் தருகின்றது. கிடைக்கும் செல்வங்கள் யாவும் எங்கள் மாணவச் செல்வத்திற்கு பயன்பட வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்