யாழில் தீ; வீடுகளுக்கு  சேதம்

யாழில் தீ; வீடுகளுக்கு சேதம்

யாழில் தீ; வீடுகளுக்கு சேதம்

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2014 | 11:56 am

யாழ். குருநகர் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் மூன்று வீடுகளுக்கு  சேதம் ஏற்பட்டுள்ளது.

குருநகர் பெங்ஷால் வீதி பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் நேற்று மாலை தீ பரவியுள்ளது.

தீயினால் இரண்டு வீடுகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன், மேலும் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

யாழ் மாநகர சபையின் தீயணைப்பு சேவைப் பிரிவினர், பாதுகாப்புத் தரப்பினரின் உதவியுடன் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

வீடொன்றின் சமையல் அடுப்பிலிருந்தே தீ பரவியிருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்