மலையாள நடிகைக்கு கொலை மிரட்டல்!

மலையாள நடிகைக்கு கொலை மிரட்டல்!

மலையாள நடிகைக்கு கொலை மிரட்டல்!

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2014 | 3:19 pm

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை அன்சிபா ஹாசன். இவர் திரிஷ்யம் படத்தில் மோகன்லால், மீனா தம்பதியின் மூத்த மகள் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. மலையாள பட உலகில் இதுவரை எந்த படமும் செய்யாத வசூல் சாதனையும் நிகழ்த்தி உள்ளது.

தற்போது தனது கவர்ச்சி படங்களை அண்மையில் இணையத்தில் பரவ விட்டார். இதனால் கோபமடைந்த சிலர் இது போன்று கவர்ச்சி போஸ் கொடுப்பது மத கொள்கைக்கு விரோதமானது. இந்த செயலுக்காக கடவுள் முன் தண்டனை கிடைக்கும் என்று மிரட்டி உள்ளனர்.

அன்சிபாவை மோசமான வார்த்தைகளால் திட்டியும் எச்சரித்தும் உள்ளனர். இதனால் அன்சிபா அதிர்ச்சியில் உள்ளாராம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்