மருத்துவ அதிசயம்; இதய அறுவை சிசிச்சையின்போது 30 வினாடியில் குழந்தை பெற்ற பெண்

மருத்துவ அதிசயம்; இதய அறுவை சிசிச்சையின்போது 30 வினாடியில் குழந்தை பெற்ற பெண்

மருத்துவ அதிசயம்; இதய அறுவை சிசிச்சையின்போது 30 வினாடியில் குழந்தை பெற்ற பெண்

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2014 | 6:26 pm

மருத்துவ உலகில் அவ்வப்போது ஏதாவது அதிசயங்கள் நிகழ்வதுண்டு. அப்படி ஒரு சம்பவத்தை ஏபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் எடிட்டா ட்ராசி என்ற 35 வயதுடைய நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

36 வாரங்கள் நிறைவடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.  உடலின் பின்பகுதியில் கடுமையாக வலிப்பதாக கூறி அலறிய அவர் உதவிக்கு வைத்தியர்களை கூப்பிட்டார். உடனடியாக அவசர சிக்ச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார் ட்ராசி.

பின்னர் மருத்துவர்கள் ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர். பரிசோதனை முடிவில் அவருக்கு இதயத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர். இதனால் ட்ராசிக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். இதனையடுத்து அவர் அறுவை சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

xray_1834547c

அங்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அப்போது  ட்ராசிக்கு 30 வினாடியில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதன் பின் 9 மணி நேரம் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு தாயை காப்பாற்றினர். குழந்தையும் நலமுன் இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதய அறுவை சிகிச்சையின்போது 30 வினாடியில் ஒருபெண் குழந்தை பெற்றது மிகவும் அரிதானது என்று மருத்துவர்கள்  தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்