புனித ரமழான் மாதம் ஆரம்பம்

புனித ரமழான் மாதம் ஆரம்பம்

புனித ரமழான் மாதம் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2014 | 7:44 pm

ஹிஜ்ரி 1435 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் மாதம் இன்று இரவுடன் ஆரம்பமாகின்றது.

புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நடைபெற்றது.

இதன்போது நாட்டில் சில பகுதிகளில் தலைப்பிறை தென்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்தாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனித ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்கும் முஸ்லீம்கள் இந்த மாத இறுதியில் ஈதுல் பித்ர் நோன்புத் பெருநாளைக் கொண்டாடுவர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்