நச்சுப் பதார்த்தம் கலந்ததால் உயிரிழந்த குழந்தை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

நச்சுப் பதார்த்தம் கலந்ததால் உயிரிழந்த குழந்தை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

நச்சுப் பதார்த்தம் கலந்ததால் உயிரிழந்த குழந்தை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2014 | 3:10 pm

கண்டி – பன்வில கோமர தோட்டத்தில், உடலில் நச்சுப் பதார்த்தம் கலந்ததால், மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உடலில் நச்சுப் பதார்த்தம் கலந்து சுகவீனமுற்ற மற்றுமொரு பிள்ளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றது.

உடலில் நச்சுப் பதார்த்தம் கலந்தமையே மரணத்திற்குக் காரணம் என குழந்தையின் பிரேத பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நீர் மாதிரிகள் இரசாயன பகுப்பாய்விற்காக கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.

பிரேத பரிசோதனையின்போது, குழந்தை அருந்திய நீரில் நஞ்சுப் பதார்த்தம் கலந்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, உயிரிழந்த குழந்தையின் 05 வயதான சகோதரி சுகவீனமுற்ற நிலையில் கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குழந்தையின் மரணம் தொடர்பில் அயல் வீட்டுப் பெண் மீது சந்தேகம் எழுந்துள்ளதுடன், அதுகுறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்