சீஷெல்ஸ் மற்றும் இலங்கை அரச தலைவர்களுக்கு இடையே சந்திப்பு

சீஷெல்ஸ் மற்றும் இலங்கை அரச தலைவர்களுக்கு இடையே சந்திப்பு

சீஷெல்ஸ் மற்றும் இலங்கை அரச தலைவர்களுக்கு இடையே சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2014 | 6:50 pm

சீஷெல்சுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று அந்த நாட்டின் ஜனாதிபதியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

இதன்போது இலங்கையின் தொழில்சார் நிபுணர்களுக்கு தமது நாட்டில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதாக சிஷெல்ஸ் ஜனாதிபதி கூறியதாக ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்தோடு சீஷெல்சுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ திறந்து வைத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்