குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்

குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்

குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2014 | 9:09 am

அரச குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களால் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சருடன் நேற்று மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்ததாக குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் சங்க தலைவர் தேவிகா கொடிதுவக்கு குறிப்பிடுகின்றார்.

கடந்த சில தினங்களாக சுகாதார அமைச்சின் அதிகாரிகளால் விடுக்கப்பட்டிருந்த அறிவித்தல்கள் காரணமாக, அரச தாதி உத்தியோகத்தர்களால், குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு தடை ஏற்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

தமது கடமைகளுக்கு தடையை ஏற்படுத்தும் வகையிலான அத்தகைய ஆவணங்களை இரத்து செய்து, சுகாதார அமைச்சு அதிகாரிகளால் சரியான ஆவணங்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக குடும்பநல சுகாதார உத்தியோகத்தர் சங்க தலைவர் தெரிவித்தார்.

இதனையடுத்து சுகாதார அமைச்சர் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இன்று காலை முதல் வழமையான பணிகளுக்கு சமூகமளிக்குமாறு தமது சங்க உறுப்பினர்களிடம் அவர் கேட்டுள்ளார்.

தாதியர்களால் தமது பணிகளுக்கு தடை ஏற்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்தினம் முதல் நாடளாவிய ரீதியாக துறைசார் கடமைகளில் இருந்து விலகுவதற்கு அரச குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்திருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்