கிறிஸ்மஸ் தீவை அண்மித்துள்ள படகில் இலங்கையர்கள் அதிகமாக இருக்கின்றனர்- அவுஸ்திரேலியா

கிறிஸ்மஸ் தீவை அண்மித்துள்ள படகில் இலங்கையர்கள் அதிகமாக இருக்கின்றனர்- அவுஸ்திரேலியா

கிறிஸ்மஸ் தீவை அண்மித்துள்ள படகில் இலங்கையர்கள் அதிகமாக இருக்கின்றனர்- அவுஸ்திரேலியா

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2014 | 10:40 am

153 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவை அண்மித்துள்ள படகில் இலங்கையர்களே அதிகமாக இருக்கின்றனர் என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அந்த படகிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை மேற்கோள் காட்டி அந்த நாட்டு ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன.

இந்த புகலிடக் கோரிக்கையாளர்களுள் 32 பெண்களும், 37 சிறுவர்களும் அடங்கியுள்ளனர்.

கடந்த 13 ஆம் திகதி தென்னிந்தியாவின் பாண்டிச்சேரி பகுதியில் இருந்து புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிய படகு பயணத்தை ஆரம்பித்ததாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

படகில் சேதம் ஏற்பட்டிருப்பதுடன், நீர்கசிவு ஏற்பட்டிருப்பதாகவும் அதிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலிய ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

தமக்கு உதவுமாறு புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்