இராகலையில் நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு

இராகலையில் நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு

இராகலையில் நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2014 | 6:54 pm

நுவரெலியா ராகலை பகுதியில் நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

14 மற்றும் 16 வயதுடைய இதரண்டு சிறுவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ராகலை டிக்ஸன் சங்கிலி பாலம் உள்ள பகுதியில் குளிக்கச் சென்ற போதே இவர்கள் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.

நான்கு சிறுவர்கள் இன்று குறித்த இடத்தில் குளிக்கச் சென்றிருந்தனர்.

அவர்களில் இருவர் நீரில் இறங்கியபோது அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்