இணையத்தளம் ஊடாக சிறுவர் துஷ்பிரயோகம்;  6 பேர் கைது

இணையத்தளம் ஊடாக சிறுவர் துஷ்பிரயோகம்; 6 பேர் கைது

இணையத்தளம் ஊடாக சிறுவர் துஷ்பிரயோகம்; 6 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2014 | 1:55 pm

இணையத்தளம் ஊடாக சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்க முற்படுகின்ற இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் தொடர்பிலான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிடுகின்றது.

இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் பிரகாரம் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் அரச ஊழியர்கள் மற்றும் தொழிற்துறை சார்ந்தவர்களும் அடங்குவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இணையத்தள கணிப்பாய்வுப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ஊடாக சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக அதிகார சபை கூறியுள்ளது.

இணையத்தளம் ஊடாக சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்க முற்படுகின்றவர்கள் தொடர்பில் 1929 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு தகவல்களை தெரிவிக்க முடியும் என தேசிய சிறுவர் அதிகார சபை, மக்களிடம் கேட்டுள்ளது.

இவ்வாறான குற்றச்செயலில் ஈடுபட்ட ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டதாக அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அனோமா திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்