வடக்கில் வசந்தமும் இல்லை, கிழக்கில் உதயமும் இல்லை – ரில்வின் சில்வா

வடக்கில் வசந்தமும் இல்லை, கிழக்கில் உதயமும் இல்லை – ரில்வின் சில்வா

வடக்கில் வசந்தமும் இல்லை, கிழக்கில் உதயமும் இல்லை – ரில்வின் சில்வா

எழுத்தாளர் Staff Writer

26 Jun, 2014 | 6:00 pm

கட்சிகளின் நிறங்கள் மற்றும் ஆள் மாற்றங்களுக்கு அப்பால், கொள்கை ரீதியான மாற்றமொன்றே இன்று அவசியம் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பு – பாலமுனை பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட அலுவலகத்தை திறந்துவைப்பதற்காக நடைபெற்ற  நிகழ்வில் அவர் இதனைக் கூறினார்.

[quote]இலங்கை பொருளாதாரம் தொடர்பான நிதி அமைச்சின் அறிக்கையொன்று அண்மையில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள 9 மாகாணங்களுள் வறுமையானவர்கள் அதிகளவிலுள்ள மாகாணம் எது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்திலேயே வறுமையானவர்கள் அதிகளவிலுள்ளனர். இரண்டாவதாக கிழக்கு மாகாணம் காணப்படுகின்றது.  வட மாகாணம் மூன்றாவது இடத்திலுள்ளது. வடக்கில் யுத்தம் இருந்தமையினால் இந்த நிலை ஏற்பட்டிருக்காலம் என்று கூற முடியும். இந்த அரசாங்கம் தற்போது என்ன செய்கின்றது? அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றதா? கிழக்கில் அபிவிருத்தியை முன்னெடுத்ததா? பல பெயர்களை வைத்தனர். கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் என பெயர்களை சூட்டினர். வடக்கில் வசந்தம் ஏற்படுத்தப்படவும் இல்லை. கிழக்கில் உதயம் ஏற்படுத்தப்படவுமில்லை. முன்னர் இருந்ததை விடவும் கீழ் மட்டத்திலேயே உள்ளோம். தற்போது வாழ முடியாத நிலைய ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்தில் மோதலொன்று தோன்றுமோ? என்ற அச்சத்துடன் வாழ்கின்றோம். அதனால் இதுவரையான அரசியலில் முன்னெடுக்கப்பட்ட ஆள் மாற்றங்கள் மற்றும் நிற மாற்றங்களால் பயனில்லை. தற்போது கொள்கை ரீதியான மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டும்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்