வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு விழா ஆரம்பம்

வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு விழா ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2014 | 9:36 pm

“வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு விழா”, முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தலைமையில் இன்று ஆரம்பமானது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு விழாவில், இன்று தடகள போட்டிகள் இடம்பெற்றன.

இலங்கை சார்பாக முதல்தடவையாக 1952 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றியவரும், 1956 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் நாட்டிற்கு முதலாவது பதக்கத்தை பெற்றுக்கொடுத்த வீரருமான நாகலிங்கம் எதிரிவீரசிங்கமும் இந்த விழாவில் கலந்துகொண்டார்.

இதன்போது, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாண கல்வி பண்பாட்டு அமைச்சர் டி.குருகுலராஜா மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகத்திற்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் இன்றைய நிகழ்வின் பின்னர் வட மாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்