போலி ஆவணங்கள் மூலம் வாகன விற்பனை; பிரதேச சபை உறுப்பினர் கைது

போலி ஆவணங்கள் மூலம் வாகன விற்பனை; பிரதேச சபை உறுப்பினர் கைது

போலி ஆவணங்கள் மூலம் வாகன விற்பனை; பிரதேச சபை உறுப்பினர் கைது

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2014 | 6:20 pm

போலி ஆவணங்களை தயாரித்து, வாகன விற்பனையில் ஈடுபட்டமை தொடர்பில், ஹிங்குரங்கொடை பிரதேச சபையின் உறுப்பினர் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மிரிஹான, கல்கிஸ்ஸ, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, மிரிஹான குற்றத் தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போலி ஆவணங்களை பயன்படுத்தி வாகனமொன்றை விற்பனைசெய்ய முயற்சித்த ஒருவர் நேற்று கைக்குண்டுடன் கடுவாவெல பகுதியில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அவர் வழங்கிய தகவலுக்கமைய, அரங்கல பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த சந்தேகநபரான பிரதேச சபை உறுப்பினர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து விற்பனைக்கும், குத்தகைக்கும் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த 18 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்