பொலிஸாரை தாக்கிய சந்தேகநபர் துப்பாக்கிப் பிரயோகத்தில் பலி

பொலிஸாரை தாக்கிய சந்தேகநபர் துப்பாக்கிப் பிரயோகத்தில் பலி

பொலிஸாரை தாக்கிய சந்தேகநபர் துப்பாக்கிப் பிரயோகத்தில் பலி

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2014 | 6:50 pm

திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஒருவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கி, தப்பிச்சென்ற சந்தேகநபர் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபரை கைதுசெய்வதற்காகச் சென்ற சந்தர்ப்பத்தில், அவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதன்போதே, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதுடன், காயமடைந்த சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

திவுலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 20 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரும், மற்றையவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்