பாகிஸ்தானில் பயிற்சிபெறும் தீவிரவாதிகள் இலங்கை ஊடாக தமிழகத்திற்குள் ஊடுருவ திட்டம்

பாகிஸ்தானில் பயிற்சிபெறும் தீவிரவாதிகள் இலங்கை ஊடாக தமிழகத்திற்குள் ஊடுருவ திட்டம்

பாகிஸ்தானில் பயிற்சிபெறும் தீவிரவாதிகள் இலங்கை ஊடாக தமிழகத்திற்குள் ஊடுருவ திட்டம்

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2014 | 8:02 pm

பாகிஸ்தானில் பயிற்சிபெறும் தீவிரவாதிகள் இலங்கை ஊடாக தமிழகத்தை ஊடுருவும் திட்டம் உள்ளதாக இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையை அடுத்து, தமிழகத்தின் கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் – ராமநாதசுவாமி கோயிலில் 24 மணித்தியாலமும் புலனாய்வுத் துறையினர், கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், தனுஷ்கோடி கடற்கரை, கோடிக்கரை, வேதாரணியம், அரிச்சல் முனை மற்றும் அக்னித் தீர்த்தம் ஆகிய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மண்டபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்தியாவும் பாகிஸ்தானும் அயல்நாடுகளாக இருக்கின்ற நிலையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் இலங்கை ஊடாக இந்தியாவிற்குள் ஊடுருவுவதற்கான அவசியல் இல்லை என கடற்படை பேச்சாளர் பிரிகேடியர் கோசல வர்ணகுலசூரிய தெரிவிக்கின்றார்.

அத்துடன் இந்த விடயம் தமக்குத் தேவையற்றது எனவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் நியூஸ்பெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்