பாகிஸ்தானில் பயிற்சிபெறும் தீவிரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவ திட்டம்

பாகிஸ்தானில் பயிற்சிபெறும் தீவிரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவ திட்டம்

பாகிஸ்தானில் பயிற்சிபெறும் தீவிரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவ திட்டம்

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2014 | 2:22 pm

பாகிஸ்தானில் பயிற்சிபெறும் தீவிரவாதிகள் தமிழகத்தை ஊடுருவும் திட்டம் உள்ளதாக இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையை அடுத்து தமிழகத்தின் கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 24 மணித்தியாலமும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு தனுஷ்கோடி கடற்கரை மற்றும் அக்னித்தீர்த்தம் ஆகிய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மண்டபம் பொலிஸார் தெரிவித்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்