படக்குழுவினரை எச்சரித்த நயன்தாரா

படக்குழுவினரை எச்சரித்த நயன்தாரா

படக்குழுவினரை எச்சரித்த நயன்தாரா

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2014 | 10:31 am

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கும் திரைப்படம் தனியொருவன்.

இந்த படத்தில் நயன்தாரா பொலிஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் கணேஷ் வெங்கட்ராமனுக்கு நெருங்கிய நண்பராகவும் நடிக்கிறார் நயன்தாரா.

நட்புக்கும் காதலுக்கும் இடையே சிக்கி தவிக்கும் நயன்தாரா கதாப்பாத்திரம்  மிகவும் சிரத்தையுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதனிடையில் நண்பர்களாக நடிக்கும் நயன்தாரா மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் உண்மையிலேயே நெருங்கி பழகி வருவதாகவும், கூடிய விரைவில் காதலில் விழப்போகிறார்கள் என்று வலைதளங்களில் செய்திகள் வந்தன.

இந்த வதந்தியை படக்குழுவினர் பப்ளிசிடிக்காக பரப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்திகளை பார்த்த நயன்தாரா மிகவும் கோபமடைந்துள்ளார். ஏற்கெனவே வந்த வதந்திகளால் நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டுவிட்டது.

இதற்கு மேல் என்னை பற்றி தேவையில்லாமல் வதந்தியை பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என எச்சரிக்கை செய்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்