நாட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது- எஸ்.பி.திசாநாயக்க

நாட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது- எஸ்.பி.திசாநாயக்க

நாட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது- எஸ்.பி.திசாநாயக்க

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2014 | 8:20 am

நாட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்கள் தொடர்பிலும் கருத்து வெளியிட்டார்.

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்த கருத்து:-

[quote]முப்பதாண்டுக்கால யுத்தத்தை எதிர்க்கொண்டோம். இதனால் வடக்கு முஸ்லிம்களே கூடுதலாக பாதிக்கப்பட்டனர். அத்துடன் வடக்கு தமிழர்களும் பாதிக்கப்பட்டனர். அந்த யுத்தம் நாடு முழுவதிலும் விஸ்தரித்து தலதா மாளிகை மற்றும் ஸ்ரீ மா போதிய வரை சென்றது. எமது மக்கள் பஸ்கள் மற்றும் ரயில்களில் உயிரிழந்தனர். அந்த முப்பதாண்டு யுத்தத்திலிருந்து நாட்டை மீட்டதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த சம்பவத்தின் போது பொறுப்புடைய தேரர்கள் அவற்றை நிறுத்த நடவடிக்கை எடுத்தனர். அதே போன்று ஏனைய மத தலைவர்களும்  அரசாங்கத்திடம் அவற்றை கட்டுப்படுத்த செயற்பட்டனர். அளுத்கம சம்பவம் கவலையளிக்கின்றது. அதனுடன் தொடர்புடையவர்களை சட்டதின் முன் நிறுத்த வேண்டும். உலகில் மிகவும் வேகமாக அபிவிருத்தி அடைந்து வரும் இலங்கையை பாதுகாக்க அனைவரும் முன்னின்று செயற்பட வேண்டும்.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்