திருகோணமலையில் ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய 8 மாணவர்களுக்கு பிணை

திருகோணமலையில் ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய 8 மாணவர்களுக்கு பிணை

திருகோணமலையில் ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய 8 மாணவர்களுக்கு பிணை

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2014 | 8:11 pm

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் 08 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களான 08 மாணவர்களும் இன்று மீண்டும் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்வதற்கு நீதவான் டி.சரவணராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருகோணமலை நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் நுழைந்து அதன் உரிமையாளரை தாக்கி, பொருட்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் 08 மாணவர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்ட்டிருந்தனர்.

திருகோணமலை பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாகவுள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளருடன் ஏற்பட்ட வாக்குவாதம் வலுவடைந்தமையால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு குறித்த மாணவர்கள் தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்