சிறுமிகளின் விருப்பத்துடன் 90 வீதமான துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெறுகின்றன -அஜித் ரோஹண

சிறுமிகளின் விருப்பத்துடன் 90 வீதமான துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெறுகின்றன -அஜித் ரோஹண

சிறுமிகளின் விருப்பத்துடன் 90 வீதமான துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெறுகின்றன -அஜித் ரோஹண

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2014 | 9:50 am

இலங்கையில் நாளாந்தம்  ஐந்து அல்லது ஆறு  சிறுவர்  துஷ்பிரயோக  சம்பவங்கள் பதிவாவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு

இலங்கையில் நாளாந்தம்  ஐந்து அல்லது ஆறு  சிறுவர்  துஷ்பிரயோக  சம்பவங்கள் பதிவாவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

வருடாந்தம் இத்தகைய  இரண்டாயிரம் சம்பவங்கள் பதிவாவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

இவற்றில் 90 வீதமானவை, சிறுமிகளின் விருப்பத்துடனேயே இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், அது சட்டத்தின் முன் தவறு எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  சுட்டிக்காட்டினார்.

சிறுவர் துஷ்பிரயோகம் குறைக்கப்பட வேண்டுமாயின், பல தரப்பினருக்கு பொறுப்புக்கள் காணப்படுவதாகவும் அவர்  குறிப்பிட்டார்.

சிறுவர்களின் பேற்றோர் ஆசிரியர்கள், மற்றும் அவர்களின் தற்காலிக பாதுகாவலர்களிடமே அதற்கான பொறுப்பு காணப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்