களனியில் ஒருவர் கூரான ஆயுதத்தால் தாக்கிக் கொலை

களனியில் ஒருவர் கூரான ஆயுதத்தால் தாக்கிக் கொலை

களனியில் ஒருவர் கூரான ஆயுதத்தால் தாக்கிக் கொலை

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2014 | 2:01 pm

களனி தல்வத்த பகுதியில் கூரான ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கே.ஈ.பெரேரா மாவத்தையில் 32 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்,

தமது மனைவியுடன் வர்த்தக நிலையத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது குறித்த நபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

முச்சக்கரவண்டியில் வந்த ஐவரடங்கிய குழு இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இதேவேளை, அயகம பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்