கண்டியில் நடைபெறவுள்ள கார் பந்தய களியாட்ட நிகழ்வினை இரத்து செய்ய கோரிக்கை

கண்டியில் நடைபெறவுள்ள கார் பந்தய களியாட்ட நிகழ்வினை இரத்து செய்ய கோரிக்கை

கண்டியில் நடைபெறவுள்ள கார் பந்தய களியாட்ட நிகழ்வினை இரத்து செய்ய கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2014 | 4:20 pm

கண்டி நகரில் எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இரவு நேர கார் பந்தய களியாட்ட நிகழ்வுகளை போட்டிகளை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர், அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் தவுல்தெனிய ஞானிஸ்ஸ தேரர், ராமாஞ்ஞ பீடத்தின் மகாநாயக்கர் நாபான பேமசிறி தேரர், மல்வத்துபீடத்தின் மகாநாயக்கர் வேயங்கொட விஜித்தஸ்ரீ தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யுனெஸ்கோ அமைப்பினால் தேசிய மரபுரிமையாக பெயரிடப்பட்டுள்ள கண்டி நகரில், தலதா மாளிகை உள்ளிட்ட புனித தலங்கள் இருப்பதனால், அங்கு இவ்வாறான களியாட்ட நிகழ்வொன்றை நடத்துவது பொருத்தமற்றது என அவர்கள் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்