ஐந்து வெவ்வேறு வாகன விபத்துகள்; நால்வர் பலி

ஐந்து வெவ்வேறு வாகன விபத்துகள்; நால்வர் பலி

ஐந்து வெவ்வேறு வாகன விபத்துகள்; நால்வர் பலி

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2014 | 2:09 pm

முல்லைத்தீவு, இரத்தினபுரி, வென்னப்புவ, கொஸ்வத்த, முந்தல் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

புதுக்குடியிருப்பு விஸ்வமடு பகுதியில் லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் உயிரிழப்பு சம்பவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் யாழ் இளவாலை பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த 27 வயதானவர்  என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதியை புதுகுடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
……
இரத்தினபுரி- கொழும்பு பிரதான வீதியில் லொறியொன்று மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் 24 வயதான இளைஞன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வென்னப்புவ பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொஸ்வத்த பகுதியில் உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விப்த்துக்குள்ளானதில் 56 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மங்களவெளி சின்னப்பாடு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்

ரஹ்மத்புரம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்