இறுதி சில செக்கன்களில் போட்ட கோல் மூலம் போர்த்துக்கல் அடுத்த சுற்றுக்கு தகுதி

இறுதி சில செக்கன்களில் போட்ட கோல் மூலம் போர்த்துக்கல் அடுத்த சுற்றுக்கு தகுதி

இறுதி சில செக்கன்களில் போட்ட கோல் மூலம் போர்த்துக்கல் அடுத்த சுற்றுக்கு தகுதி

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2014 | 8:42 am

இறுதி சில செக்கன்களுக்குள் போட்ட கோல் மூலம் உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை போர்த்துக்கல் அணி தொடர்ந்தும் தக்க வைத்துள்ளது.

குழு ஜி யில் அமெரிக்க அணிக்கெதிரான போட்டியை 2 – 2 என்ற கோல்கள் கணக்கில் போர்த்துக்கல் அணி சமன்செய்துள்ளது.

இந்த குழுவில் தலா 4 புள்ளிகளைப் பெற்றுள்ள ஜேர்மன் மற்றும் அமெரிக்க அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளன.

தலா ஒரு புள்ளிப் பெற்றுள்ள கானா மற்றும் போர்த்துக்கல் அணிகள் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்துள்ளன.

எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள போர்த்துக்கல் – கானா , மற்றும் அமெரிக்க – ஜெர்மன் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் மூலமே இறுதி இரண்டு சிறந்த அணிகள் தெரிவுசெய்யப்படவுள்ளன.

இதேவேளை, இறுதி 16 அணிகள் விளையாடும் சுற்றுக்கு ஏச் குழுவில் இருந்து முதலாவது அணியாக பெல்ஜியம் நேற்று தகுதி பெற்றது.

ரஷ்ய அணிக்கெதிரான போட்டியில் 1 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றதன் மூலம் பெல்ஜியம் இந்த வாய்ப்பினை பெற்றுக்கொண்டது.

இதேவேளை, ஏச் குழுவின் மற்றுமொரு போட்டியில் தென்கொரிய அணியை 4 – 2 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்ட அல்ஜிரிய அணி புள்ளிகள் பட்டியலில் 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த குழுவில் தலா ஒரு புள்ளிகளைப் பெற்றுள்ள ரஷ்ய மற்றும் தென்கொரிய அணிகள் 3 ஆம் மற்றும் நான்காம் இடங்களைப் பெற்றுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்