அயல் நாட்டு இராஜதந்திரிகள் புதுடில்லியில் இரகசிய கலந்துரையாடல்; சுஜாதா சிங் ஏற்பாடு

அயல் நாட்டு இராஜதந்திரிகள் புதுடில்லியில் இரகசிய கலந்துரையாடல்; சுஜாதா சிங் ஏற்பாடு

அயல் நாட்டு இராஜதந்திரிகள் புதுடில்லியில் இரகசிய கலந்துரையாடல்; சுஜாதா சிங் ஏற்பாடு

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2014 | 8:57 pm

அயல் நாடுகளிலுள்ள இந்திய இராஜதந்திர அதிகாரிகள் புதுடில்லி நகருக்கு அழைக்கப்பட்டு, இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த இரகசிய கலந்துரையாடல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் சுஜாதா சிங்கினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு அண்மையிலுள்ள நாடுகள் தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி கொண்டுள்ள கொள்கை குறித்து இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.

சார்க் வலயத்திலுள்ள நாடுகள் மாத்திரமன்றி, சீனா, மியன்மார் மற்றும் முருசி ஆகிய நாடுகளில் கடமையாற்றும் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் இந்த இரகசிய கலந்துரையாடலுக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

ஈரான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், டர்க்மெனிஸ்தான் மற்றும் கஸகஸ்தான் ஆகிய நாடுகளில் கடமையாற்றும் இராஜதந்திர அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்குகொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலில் இந்தியாவின் அயல்நாடுகள் தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி கொண்டுள்ள கொள்கை குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த விடயம் தொடர்பில் பிரபல இராஜதந்திர அதிகாரி கல்யானந்த கொடகே கருத்து வெளியிட்டார்.

[quote]அவர்களின் பாதுகாப்பு குறித்தே இந்தியா முதலில் கவனம் செலுத்தும். இரண்டாவதாகவே எமது பிரச்சினைகளை தீர்க்கின்றமை குறித்து கவனம் செலுத்தும். அவர்கள் இலங்கையுடன் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ள இரு விடயங்களே காரணமாக அமைந்துள்ளன. ஒன்று, இந்து சமுத்திர பிரச்சினை. மற்றையது தமிழர் பிரச்சினை குறித்தே தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ள அவர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். தமிழர் பிரச்சினையை தீர்க்க வேண்டுமாயின், இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியமாகின்றது. இந்து சமுத்திரத்தில் நாளொன்றுக்கு சுமார் 447 கப்பல்கள் பயணிக்கின்றன. இந்த நிலையில் வேறு நாடொன்றுடன் தொடர்புகளை நாம் ஏற்படுத்தும் பட்சத்தில், அவர்களின் பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தலாக அமைந்து விடும். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துக் கொள்வதற்காகவே அவர்கள் எம்முடன் சிறந்த உறவுகளை பேண வேண்டிய அவசியம் உள்ளது.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்