முஸ்லிம் இனத்தவரின் வர்த்தக நிலையத்திற்கு தீ வைப்பதனை நான் கண்டேன் – பாலித தெவரப்பெரும

முஸ்லிம் இனத்தவரின் வர்த்தக நிலையத்திற்கு தீ வைப்பதனை நான் கண்டேன் – பாலித தெவரப்பெரும

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2014 | 9:25 pm

அடுத்த பாராளுமன்ற அமர்வில் தான் இராஜினாமா செய்யவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியராளர் சந்திப்பின் போது இது குறித்து அவர் மேலும் தெளிவுப்படுத்தினார்.

[quote]பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் 225 உறுப்பினர்களில் நானும் ஒருவன். பொலிஸார் முன்னிலையில் வெலிபென்ன பிரதேசத்தில் முஸ்லிம்  இனத்தவரின் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு தீ வைப்பதனை நான் கண்டேன். அவ்வாறு செய்ய இடமளிக்க வேண்டாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளியுங்கள் என கூறினேன். ஆனால் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. பொலிஸ் மாஅதிபர் நிச்சயமாக பதவி விலக வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் சிங்கள இனத்திற்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்க முடியாது. அடுத்த பாராளுமன்றத்தில் நான் இராஜினாமா செய்வேன். இதனை எம்மால் தாங்கிக் கொள்ள முடியாது. அராங்கம் இதில் அரசியல் இலாபம் தேடிக்கொள்ள முயற்சிக்க கூடாது. [/quote]

நாட்டின் சட்டம் தொடர்பில் பிரச்சினை உள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் இதன்போது கூறினார்.

[quote] பொலிஸ் மாஅதிபர் கோமாளியாக செயற்பட கூடாது. இந்த நாட்டில் சட்டம் தொடர்பில் எமக்கு பிரச்சனை உள்ளது. சட்டத்தை நாட்டில் நடைமுறைப்படுத்தாமைக்கான காரணம் என்ன? ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போது தான் தாக்குதல்கள் மற்றும் தீ வைப்புகள் இடம்பெற்றது. இதன் பின்னணியில் யார் இருக்கின்றனர். சட்டத்தை செயற்பட விடாது தடுப்பது யார் என்றே எங்களுக்கு தெரிந்துக் கொள்ள வேண்டும. [/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்