முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் இருவர் பலி

முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் இருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2014 | 12:15 pm

மாத்தறை ஊருபொக்க பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

பலங்கொடையிலிருந்து தெனியாய நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வீதியைவிட்டு விலகி இன்று அதிகாலை 4.30 அளவில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில், இருவர் ஊருபொக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Untitled


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்