மாயமான மலேசிய விமானம் MH370;  பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்?

மாயமான மலேசிய விமானம் MH370; பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்?

மாயமான மலேசிய விமானம் MH370; பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்?

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2014 | 4:50 pm

MH370 விமானம் மாயமான சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசாரணகளை முன்னெடுக்கும் மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

MH370 விமானத்தின் பிரதான விமானியே விமானம் மாயமான சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சஹாரே அஹமட் ஷா என்ற 53 வயதுடைய குறித்த விமானி 3 பிள்ளைகளின் தந்தையாவார்.

குறித்த விமானியிடம் எதிர்காலத்தில் அவரின் கடமைகள் குறித்து எவ்வித முன்னேற்பாடுகளோ அல்லது திட்டங்களோ காணப்படவில்லை என தெரிவிக்கப்படுறகிறது.

அவரது தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கை தொடர்பிலான எதிர்கால திட்டங்கள் குறித்தும் அவரிடம் எவ்வித பொறுப்பும் காணப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, குறித்த விமானம் காணாமல் போனதாக கூறப்படும் கடற் பிரதேசத்தில் குறித்த விமானி இதற்கு முன்னர் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

239 பயணிகளுடன் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி மாயமான மலேசிய விமானம் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்