மக்கள் மத்தியில் குரோதங்களை உருவாக்கும் பேரணிகளுக்கு அனுமதியில்லை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

மக்கள் மத்தியில் குரோதங்களை உருவாக்கும் பேரணிகளுக்கு அனுமதியில்லை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2014 | 6:02 pm

இன அல்லது மத ரீதியில் மக்கள் மத்தியில் குரோத மனப்பாங்கை உருவாக்கும் பேரணிகள் மற்றும் ஊர்வலங்களுக்கு எதிர்காலத்தில் அனுமதி வழங்கப்படமாட்டாது என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அண்மையில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் சமய ரீதியான கூட்டங்களுக்கு எவ்வித தடைகளும் இதனால் ஏற்படாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அளுத்கம மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்ககளில் ஏற்பட்ட அமைதின்மை தொடர்பில் இதுவரை 138 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சருமான அஜித் ரோஹன தெரவித்தார்.

அமைதியின்மை தொடர்பில் இதுவரை 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் 30 தொடக்கம் 40 பேர் வரையில் கைது செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்