டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நிறைவு; 908 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நிறைவு; 908 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2014 | 9:34 pm

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக முப்படையினர், பொலிஸார் மற்றும் சுகாதார அமைச்சின் உத்தியோத்தர்கள் இணைந்து ஆரம்பித்த மூன்று நாள் செயற்திட்டத்தின் இன்றுடன் நிறைவுபெறுகின்றது.

இதேவேளை டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 908 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மூன்று நாட்கள் கொண்ட விசேட திட்டமொன்று கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

அதன் மூன்றாம் நாள் செயற்பாடுகள் இன்று மட்டக்குளியில் நடைபெற்றன.

அப்பகுதியில் டெங்கு நுளம்புகள் அதிகளவில் பரவுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

டெங்கு நுளம்பு பரவமுடியுமான 71,000 இடங்களை தற்போது பரிசோதனை செய்துள்ளதாகவும் அவற்றில் 1800 இடங்களில் இருந்து டெங்கு நுளம்பு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

கொழும்பு மாநகர எல்லைக்குள் மாத்திரம் 53 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்