சாதாரண தர மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை விநியோகிப்பதில் சிக்கல்

சாதாரண தர மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை விநியோகிப்பதில் சிக்கல்

சாதாரண தர மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை விநியோகிப்பதில் சிக்கல்

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2014 | 3:19 pm

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களான  தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பல விண்ணப்பங்கள் உரிய முறையில் பூரணப்படுத்தப்படவில்லை என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உரிய முறையில் பூரணப்படுத்தப்படாத விண்ணப்பங்கள் மீண்டும் விண்ணப்பதாரர்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும் என ஆட்பதிவு  ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதில் கால தாமதம் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விண்ணப்பத்திற்கு தேவையான முத்திரை ஒட்டப்படாமலும், அதிபர், மாணவர்ளின் கையொப்பம் இன்றியும் .சில விண்ணப்பங்களில் திருத்தமான கையெழுத்து இன்றியும் அனுப்பி வைக்கப்படுவதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் உரிய அளவிலான புகைப்படம் இன்றியும், பிறப்புச் சான்றிதல் உறுதிப் படுத்தப்படாமலும், விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கு முன்னர் பாடசாலை அதிபர்கள் அவற்றை பரிசோதித்து அனுப்பி வைக்குமாறும் வலயக் கல்வி பணிமனைகள் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் ஆட்பதிவு ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சுமார் இரண்டு இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்க வேண்டியுள்ளபோதிலும் இதுவரை அவை கிடைக்கவில்லை எனவும் அவர்  கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்