சட்டவிரோதமாக தமிழகத்தை அடைந்த குடும்பம் விளக்கமறியலில்

சட்டவிரோதமாக தமிழகத்தை அடைந்த குடும்பம் விளக்கமறியலில்

சட்டவிரோதமாக தமிழகத்தை அடைந்த குடும்பம் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2014 | 7:08 pm

படகுமூலம் சட்டவிரோதமாக தமிழகத்தைச் சென்றடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இலங்கையர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முல்லைத்தீவைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளே படகு மூலம் நேற்று தனுஷ்கோடியை சென்றடைந்திருந்தனர்.

அவர்கள் தமிழக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் பிரவேசித்த குற்றத்திற்காக விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தமிழகத்தைச் சென்றடைந்த குறித்த பெண் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் ஆகியோர் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்படலாம் என தமிழக அதிகாரிகள் தெரிவித்ததுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்