என்னைப் பற்றி அஜித்திற்கு தெரியும் – த்ரிஷா

என்னைப் பற்றி அஜித்திற்கு தெரியும் – த்ரிஷா

என்னைப் பற்றி அஜித்திற்கு தெரியும் – த்ரிஷா

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2014 | 6:15 pm

அஜித்துடன் அதிகப் படங்களில் நடித்தவர்கள் பட்டியலில் த்ரிஷாவுக்குதான் முதலிடம் கொடுக்கலாம், ‘ஜி’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’ படங்களில் இணைந்து நடித்தவர்.

இப்போது கௌதம் மேனன் இயக்கும் படத்திலும் இணைந்துள்ளார். இதில் இன்னொரு கதாநாயகியாக அனுஷ்காவும் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது.

பாடல் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளன. இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. சத்யா என்ற தலைப்பை தற்காலிகமாக வைத்துள்ளனர்.

அஜித் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று பொலிஸ் அதிகாரி வேடம்.

அஜித்துடன் மீண்டும் நடிப்பது த்ரிஷாவுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அவருடன் அதிகப் படங்களில் நடித்த நாயகி என்ற பெருமை வேறு கிடைத்திருப்பது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது.

இது குறித்து த்ரிஷா கூறுகையில், “அஜித்துடன் நான் நடிக்கும் நான்காவது படம் இது. எனது நடிப்புத் திறமை பற்றி அவர் ஏற்கனவே அறிந்திருப்பதால்தான் இந்த படத்தில் அழுத்தமான பாத்திரத்தில் என்னை நடிக்க வைத்துள்ளார்.

அவர் எப்பவுமே என்னோட பெஸ்ட் ஜோடி என்றும் என் நடிப்புத் திறமை அஜித்துக்குத் தெரியும் என்றும் அதனால்தான் அவர் படத்தில் மீண்டும் வாய்ப்பு தந்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்