எனக்கு எவ்வித பொறுப்புக்களும் வழங்கப்படவில்லை – சஜித்

எனக்கு எவ்வித பொறுப்புக்களும் வழங்கப்படவில்லை – சஜித்

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2014 | 8:12 pm

ஐக்கிய தேசியக் கட்சியில் பல்வேறு பதவிகளும் பொறுப்புக்களும் தம்மிடம் வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிறேமதாஸ தெரிவிக்கின்றார்.

அவ்வாறு பொறுப்பு கையளிக்கப்பட்டமை தொடர்பில் தாம் அறியவில்லை எனவும் சஜித் பிறேமதாஸ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் கிடைக்கவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிறேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் பொறுப்புக்களை கையளிப்பது தொடர்பில் தம்முடன் எவ்வித கலந்துரையாடலும் இதுவரை நடத்தப்படவில்லை என அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்