எட்டியாந்தோட்டையில் வாகன விபத்து; மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் காயம்

எட்டியாந்தோட்டையில் வாகன விபத்து; மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் காயம்

எட்டியாந்தோட்டையில் வாகன விபத்து; மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2014 | 8:08 pm

எட்டியாந்தோட்டை வேவல்தலாவ பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

வேவல்தலாவ பகுதியிலுள்ள சிறியளவிலான பள்ளமொன்றில் மாகாண சபை உறுப்பினர் பயணித்த கெப் வாகனம் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் சிறு காயங்களுக்கு இலக்கான சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் அன்னாமலை பாஸ்கரன் மற்றும் அவரது சாரதி ஆகியோர் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்