இலங்கை மீனவர்கள் 12 பேர் இந்திய கடற்பரப்பில் கைது

இலங்கை மீனவர்கள் 12 பேர் இந்திய கடற்பரப்பில் கைது

இலங்கை மீனவர்கள் 12 பேர் இந்திய கடற்பரப்பில் கைது

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2014 | 7:18 pm

இந்திய கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் மேலும்   12 இலங்கை மீனவர்கள் இந்திய கரையோரப் பாதுகப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

குறித்த மீனவர்களின் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னையின் வடக்கிழக்கு பகுதியிலிருந்து 105 கடல் மைல் தொலைவிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களும் கைபற்றப்பட்ட படகுகளும் சென்னை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை படகிலிருந்த 300 கிலோகிராம் நிறையுடைய டூனா மீன்களும் இந்திய கரையோரப்பாதுகாப்பு படையினரால் கைபற்றப்பட்டுள்ளன.

இந்தியாவில் இந்த வருடம் 105 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்