இறுதி நிமிடத்தில் அதிர்ச்சித் தந்த மெஸி; அடுத்த சுற்றுக்கு தெரிவானது ஆர்ஜென்டினா

இறுதி நிமிடத்தில் அதிர்ச்சித் தந்த மெஸி; அடுத்த சுற்றுக்கு தெரிவானது ஆர்ஜென்டினா

இறுதி நிமிடத்தில் அதிர்ச்சித் தந்த மெஸி; அடுத்த சுற்றுக்கு தெரிவானது ஆர்ஜென்டினா

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2014 | 9:14 am

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் இன்று அதிகாலை நடைபெற்ற லீக் போட்டியில் நைஜீரியா மற்றும் பொஸ்னியா அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 1-0 என்ற  கோல் கணக்கில் நைஜீரியா வெற்றி பெற்று அடுதத சுற்றுக்கு தகுதிப் பெற்றது.

இதேவேளை போட்டி நேரத்தை விட மேலதிகமாக வழங்கப்பட்ட நேரத்திற்குள்  லயனல் மெஸி அடித்த கோலொன்றின் மூலம் ஈரானுக்கு எதிரான உலகக் கிண்ண லீக் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது.

1messi

மினீரோ மைதானத்தில் நடைபெற்ற எஃப் பிரிவிற்கான போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் ஈரான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

90 நிமிடங்களின் முடிவிலும் எந்த அணியும் கோல் அடிக்காத காரணத்தினால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மெஸி கோலொன்றை போட்டதன் மூலம்  ஆர்ஜென்டினா அணி 1-0 என்ற கணக்கில் வெற்றிப்பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளது.

இந்த உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டியில் மெஸ்ஸி அடித்த இரண்டாவது கோலாக பதிவானதுடன் சர்வதேச போட்டியில் அவர் பெற்ற 40 ஆவது கோல் என்பதும் குறிப்பிடத்கதக்து.

இதேவேளை இன்று காலை மற்றுமொறு லீக் போட்டி ஜேர்மனி மற்றும் கானா அணிகளுக்கு இடையில் நடைபெற்றது.
இரு அணிகளும் முதல் பாதியில் கோலெதனையும் போடாத  நிலையில் இரண்டாவது பாதியில் இரு அணிகளும்  தலா 2 கோல்களைப் போட்டன.

4messi

போட்டியின் 51ஆவது நிமிடத்தில் ஜெர்மினியின் கோட்சே கோலொன்றை போட மூன்று நிமிடங்களில் கானா அணியும் கோலொன்றை போட்டது.

இதன் மூலம் இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.

444arg

கானா அணியின் கியான் போட்டியின் 63ஆவது நிமிடத்தில் கோல் அடித்ததுடன் 71 ஆவது நிமிடத்தில் கானா அணயின் க்ளோஸ் கோலொன்றை போட போட்டி இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கல் சமநிலையில் முடிவடைந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்