ஆட்கடத்தல் தொடர்பில் கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் மீண்டும் இணைந்தது இலங்கை

ஆட்கடத்தல் தொடர்பில் கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் மீண்டும் இணைந்தது இலங்கை

ஆட்கடத்தல் தொடர்பில் கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் மீண்டும் இணைந்தது இலங்கை

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2014 | 8:40 am

ஆட்கடத்தல் தொடர்பில் கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகள் வரிசையில் இலங்கையின் பெயரை, அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாகவும் இணைத்துள்ளது.

ஆட்கடத்தல் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தால் வருடாந்தம் வெளியிடும் அறிக்கையில், இந்த சட்டவிரோத நடவடிக்கையை தடுப்பதற்கு தேவையான குறைந்தபட்ச ஏற்பாடுகளையேனும் இலங்கை அரசாங்கம் முழுமையாக செயற்படுத்தத் தவறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் ஆட்கடத்தல் செயற்பாடுகளை தடுப்பதற்காக இலங்கை விசேட நடவடிக்கைகள் சிலவற்றை ஆரம்பித்துள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகளை ஆரம்பித்தாலும் ஆட்கடத்தலை தடுப்பதற்காக இலங்கை மேற்கொள்ளும் ஒட்டுமொத்த முயற்சியில் முன்னேற்றம் காணப்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையை தடுப்பது தொடர்பில் வரையறுக்கப்பட்ட வகையிலேயே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் சிறுவர்கள், பெண்கள் போன்றே ஆண்களும் பாலியல் தொழில் மற்றும் பலவந்தமாக சேவையில் ஈடுபடுத்துவதற்கு இந்த சூழல் காரணமாக அமைந்துள்ளதென அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்